மாடம்பாக்கத்தில் இன்று மின்தடை


மாடம்பாக்கத்தில் இன்று மின்தடை
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாடம்பாக்கத்தில் இன்று மின்தடை ஏற்படும் என மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

படப்பை துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாடம்பாக்கம், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மாடம்பாக்கம், நீலமங்கலம், லட்சுமிபுரம், பள்ளஞ்சேரி, ராகவேந்திரா நகர், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


Next Story