நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று (வியாழக்கிழமை) சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இதன் காரணமாக நெல்லிக்குப்பம் ஏ.ஏ.எம்.மருத்துவமனை, ஸ்ரீவாரி நகர், வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு, வைடிப்பாக்கம் சாலை, ஈ.ஐ.டி.பாரி குடியிருப்பு, மணியக்காரர் தெரு, வைத்தியநாதன் தெரு, தமிழ்குச்சிபாளையம், ரத்தினம் பிள்ளை தெரு, வஜிர்கான் தெரு, ராஜீவ் காந்தி நகர், திடீர்க் குப்பம், ஏ.வி.ஜி. தெரு, 1-வது மற்றும் 2-வது காந்தி வீதி, அங்காளம்மன் கோவில் வீதி, மெயின் ரோடு, அம்பேத்கர் சிலை முதல் பெட்ரோல் பங்க் வரை இன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

இதேபோல் சேத்தியாத்தோப்பு மற்றும் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சேத்தியாத்தோப்பு, எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளூர், மருதூர், பு.உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்கரமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகனூர், சாக்கங்குடி, ஆயிப்பேட்டை, ஆடூர், வடஹரிராஜபுரம், வளையமாதேவி, முகந்தெரியாகுப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டிமுனை, பெருந்துறை, புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, அகரஆலம்பாடி, பு.ஆதனூர், அகரம், தர்மநல்லூர், மும்முடிசோழகன், கத்தாழை உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.


Next Story