நொய்யல்-வெங்கமேடு பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


நொய்யல்-வெங்கமேடு பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

நொய்யல்-வெங்கமேடு பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

புகழூர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மண்மங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெங்கமேடு, வெண்ணைமலை, காதப்பாறை, வெண்ணைமலை, பசுபதிபாளையம், காளிப்பாளையம், பூலாம்பாளையம், சிவியம்பாளையம், சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், தூளிப்பட்டி, பண்டுதகாரன்புதூர், மண்மங்கலம், சிட்கோ, கடம்பன்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story