சிக்கல் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக சிக்கல் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், கீழக்கிடாரம், மேலக்கிடாரம் காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்க்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்க்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன பகுதிகள், தனியார் உப்பு நிறுவன பகுதிகள், மற்றும் இறால் பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
கீழக்கரை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன மாயாகுளம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு சில பகுதி, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலாதோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி மின்செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.