திருமானூர் பகுதியில் இன்று மின்தடை


திருமானூர் பகுதியில் இன்று மின்தடை
x

திருமானூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

திருமானூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், சேனாபதி, முடிகொண்டான், கீழ காவட்டான்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கோவிலூர், சின்ன பட்டாக்காடு, மாத்தூர், காமரசவள்ளி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனைகுறிச்சி, திருமழபாடி, இலந்தைகூடம், வண்ணம்புத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story