நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 1:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம், இடையமேலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம், இடையமேலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், முதுவந்திடல், டி.பாப்பாங்குளம், மேலச்சொரிக்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், வெள்ளக்கரை, நயினார்பேட்டை, கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், தட்டாங்குளம், மடப்புரம், பூவந்தி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் நிறுத்தம்

இடையமேலூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடையமேலூர், கூவாணிப்பட்டி, கோமாளிப்பட்டி, சக்கந்தி, புதுப்பட்டி, கே. எம். காலனி, மங்கான்பட்டி, டி.எம்.காலனி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, காராமோடை, தமராக்கி, கொத்தங்குளம், மலம்பட்டி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி, சாலூர், பாப்பாக்குடி, கன்னிமாரப்பட்டி, ஒக்குப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story