நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

சிக்கல்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜ மனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், கூத்தூர், கோகூர், ஆனைமங்கலம், அகரகடம்பனூர், ஆழியூர், புலியூர், வடக்காலத்தூர், இலுப்பூர், ராதாமங்கலம், தேவூர், இருக்கை, வெண்மணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story