நாளை மின் நிறுத்தம்
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மயிலாடுதுறை துணை மின் நிலையம், அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம் மற்றும் வழுவூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்கோலக்கா, கோவில்பத்து, ரெயில்வே ரோடு, பணமங்கலம், கொள்ளிடம், முக்கூட்டு, தாடாளன் கோவில், சிதம்பரம் ரோடு, விளந்திட சமுத்திரம், பனங்காட்டான் தெரு, ஊழியன் காரன் தோப்பு, தியாகராஜ நகர், புளிச்சக்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.