நாளை மின் நிறுத்தம்
பொறையாறு, ஆக்கூர், மணல்மேடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மடப்புரம், உமையாள்புரம், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, அப்புராசபுத்தூர், காளகஸ்திநாதபுரம், கடிச்சம்பாடி, திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூர் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.பொறையாறு துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பொறையாறு, எருக்காட்டாஞ்சேரி, காத்தான் சாவடி, ஒழுகைமங்கலம், சந்திரபாடி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை செம்பனார்கோவில் உதவிசெயற் பொறியாளர் அப்துல்வஹாப் மரைக் காயர் தெரிவித்துள்ளார்.மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான திருவாளபுத்தூர், அழகன்தோப்பு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, தலைஞாயிறு, , மண்ணிபள்ளம், திருகுறகாவல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.