நாளை மின்நிறுத்தம்
செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
மயிலாடுதுறை
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் செம்பனார்கோவில், பரசலூர் மெயின்ரோடு, கருவி, ஆக்கூர், கிடாரங்கொண்டான், கீழையூர், மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story