நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Sept 2023 2:15 AM IST (Updated: 15 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனி நகரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் தாடிக்கொம்பு பீடரில் சிறப்பு பராமரிப்பு பணி நடப்பதால் சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய்முகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக திண்டுக்கல் மேற்கு உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பழனி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர், பூலாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story