நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சந்திரபாடி-சின்னூர்பேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அப்துல்வஹாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொறையாறு துணைமின் நிலையத்தில் இருந்து சந்திரபாடி பகுதிக்கு செல்லும் மின்பாதையில் இன்சுலேட்டர் மாற்றம் செய்யும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சந்திரபாடி, சின்னூர்பேட்டை, ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story