நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Oct 2023 2:00 AM IST (Updated: 11 Oct 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி, தாமரைப்பாடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

பழனி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி நகர் பகுதிகள், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, கோதைமங்கலம், தும்பலபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல் தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story