நாளை மின்தடை
சேரன்மாதேவி, வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலசெவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அதேபோல் நாரணபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெற்கட்டும்செவவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை மின் வினியோக செயற்பொறியாளர்கள் சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி), பிரேமலதா (கடையநல்லூர்) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.