நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

தென்காசி

சிவகிரி:

கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் ஜே.பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story