நாளை மின்தடை


நாளை மின்தடை
x

கங்கைகொண்டான் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

திருநெல்வேலி

கங்கைகொண்டான்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழக நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் கிராமப்புற கோட்டத்துக்கு உட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மின்பாதை விரிவாக்க பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே கங்கைகொண்டான் துணைமின் நிலையத்திலிருந்து வரும் சிப்காட் மற்றும் தொழிற்சாலை வழித்தடத்தில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு சிப்காட், கங்கைகொண்டான் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story