அன்னவாசல், காரையூர், குன்றாண்டார் கோவில் பகுதிகளில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அன்னவாசல், காரையூர், குன்றாண்டார் கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின் நிறுத்தம்
அன்னவாசல், அண்ணாபண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
காரையூர், நல்லூர்...
மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
குன்றாண்டார்கோவில், கீரனூர்...
அம்மாசத்திரம், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பேரூராட்சி பகுதிகள், பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.