காந்தி மார்க்கெட் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
காந்தி மார்க்கெட் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி இ.பி.ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மணிமண்டபசாலை, காந்திமார்க்கெட், வெல்லமண்டிரோடு, கிருஷ்ணாபுரம்ரோடு, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, சூப்பர்பஜார், பெரியகடைவீதி (ஒரு பகுதி), மதுரம் மைதானம், பாரதியார்தெரு, பட்டவர்த்ரோடு, கீழஆண்டார்வீதி, மலைக்கோட்டை, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ்நகர், ஏ.பி.நகர், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story