நீடூர், பெரம்பூர், கடலங்குடி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


நீடூர், பெரம்பூர், கடலங்குடி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடூர், பெரம்பூர், கடலங்குடி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர், பெரம்பூர் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாநல்லூர், பொன்மாசநல்லூர், பெரம்பூர், கடக்கம், கிரியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர். கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.


Next Story