பெரியகடை வீதி, திருவானைக்காவல், சிறுகனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


பெரியகடை வீதி, திருவானைக்காவல், சிறுகனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

பெரியகடை வீதி, திருவானைக்காவல், சிறுகனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சி நகரியம் கோட்டம், மலைக்கோட்டை பிரிவுக்கு உட்பட்ட இ.பி.ரோடு, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, சூப்பர்பஜார், சிங்காரத்தோப்பு, ஆனந்த அவென்யூ, காசிப்பாளையம், பாபுரோடு மற்றும் பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு மற்றும் மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள் மருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம் பேட்டை, ஜேம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் செயல் பொறியாளர் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாக்குறிச்சி, வாழையூர், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், ஸ்ரீதேவிமங்கலம், கூத்தனூர், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story