சேந்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சேந்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கூ.கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணா ரெட்டிப்பாளையம், மைலங்குப்பம் மற்றும் சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story