உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு மற்றும் எறையூர் துணை மின் நிலையங்களில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோவில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர், வண்டிபாளையம், மற்றும் நகர் ஆகிய கிராமங்களிலும், சேந்தநாடு துணை மின் நிலையத்துக்குட்பட்ட கூட்டடி-கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாளையம், தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிபாளையம், மைலங்குப்பம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

அதேபோல் எறையூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்துள்ளார்.


Next Story