விக்கிரவாண்டி, கெடார் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
விக்கிரவாண்டி, கெடார் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், வி.சாலை, கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார் பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, சின்னத்தச்சூர், வி.சாத்தனூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், கெடார் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கெடார், வீரமூர், வாழப்பட்டு, அரியலூர், கக்கனூர், குப்பம், காணை, போரூர் அடங்குனம், வேடம்பட்டு, அத்தியூர்திருக்கை, பள்ளியந்தூர், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, காங்கேயனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேற்கண்ட தகவல்கள் விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவ செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.