விழுப்புரம், அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம், அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், பில்லூர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலைஅகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்டுசாலை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
அரசூர்
இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குடுமியான்குப்பம், சிறுகிராமம், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்தூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. மேலும் காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சித்தலிங்கமடம் மின்னூட்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சித்தலிங்கமடம், பல்லரிப்பாளையம், சி.மெய்யூர், டி.புதுப்பாளையம், அய்யம்பேட்டை, அண்ட்ராயநல்லூர், அண்ணாநகர், கொடுங்கால், பரனூர், வீரசோழபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம் கொடுக்கன்குப்பம், மேல்செவளாம்பாடி, நாரணமங்கலம், மேல்வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.