விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், பில்லூர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலைஅகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்டுசாலை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியசெவலை, சர்க்கரை ஆலைப்பகுதி, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், திருமுண்டீச்சரம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணெய்நல்லூர், சேத்தூர், அமாவாசைப்பாளையம், தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.