திருமானூர், ஜமீன் ஆத்தூரில் நாளை மின்தடை


திருமானூர், ஜமீன் ஆத்தூரில் நாளை மின்தடை
x

திருமானூர், ஜமீன் ஆத்தூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், சேனாபதி, முடிகொண்டான், கீழ காவட்டான் குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கோவிலூர், சின்ன பட்டாக்காடு, மாத்தூர், காமரசவள்ளி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனை குறிச்சி, திருமழபாடி, இலந்தை கூடம், வண்ணம் புத்தூர், மேலராம நல்லூர், கீழ ராமநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என்று திருமானூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் நகரில் மேற்கு பகுதிகள், புஜங்கராயநல்லூர், ஜமீன் ஆத்தூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், உசேன் நகரம், அல்லிநகரம், மேல மாத்தூர், திம்மூர், வெண்மணி, மேத்தால் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் செல்ல பாங்கி தெரிவித்துள்ளார்.


Next Story