மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரைக்குடி,
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, ஆலங்குடி, கூத்தனூர், கூத்தக்குடி, அப்போலோ மருத்துவமனை பகுதி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியார்புரம், கண்டரமாணிக்கம், பாதரக்குடி குன்றக்குடி, சின்ன குன்றக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.
அதேபோல் சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்ரா வயல், செங்கரை, திருத்தங்கூர், ஊரவயல், வேங்கை வயல்,இலுப்பைக்குடி, பொன்நகர், லட்சுமி நகர், கலைமணி நகர், முத்து நகர் பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் நிறுத்தம்
சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்கால், கக்கன் காலனி, அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், தென்றல் நகர், கிருஷ்ணாபுரம் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ஆக்ஸ்போர்ட் நகர், புதூர், செந்தமிழ் நகர், மஜித் ரோடு, ராகினிபட்டி, தொழில் பேட்டை, குறிஞ்சி நகர், ஆரிய பவன் நகர், போலீஸ் காலனி, என்.ஜி.ஓ. காலனி, ரோஸ் நகர், பனங்காடி ரோடு, வந்தவாசி, அரசனி கீழமேடு மற்றும் சிவகங்கை ஊரகப் பகுதியில் வாணியங்குடி பி.எஸ்.ஆர். நகர், மேலவாணியங்குடி, கீழகண்டனி, மேலகண்டனி, சுந்தர நடப்பு, சாமியார்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், பையூர், அண்ணாமலை நகர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடைய நாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள் பட்டி, சோழபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.