தூத்துக்குடி பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிகப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பழுது சீரமைத்தல்
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றும் பணிகள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
எனவே, தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வ.உ.சி சாலை, சிவன் கோவில் தெரு, தெப்பக்குளத்தெரு, கிப்சன்புரம், ரங்கநாதபுரம், கீழரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி, செல்விஜர் தெரு, டி.ஆர்.நாயுடு தெரு, வடக்கு சம்பந்த மூர்த்தி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, அய்யாச்சாமி காலனி, ரகுமத் நகர், கேடிசி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அய்யனார்புரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம், சாமுவேல்புரம், கருப்பட்டி சொசைட்டி, பூபாலராயர்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அரசடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தருவைகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மேல செக்காரக்குடி, கீழ செக்காரக்குடி, கேபி தளவாய்புரம், மகிழம்புரம், ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஓசனூத்து, குலசேகரநல்லூர், வடக்கு ஆரைக்குளம், தெற்கு ஆரைக்குளம், சங்கரராஜபுரம், பச்சை பெருமாள்புரம்,
சிப்காட்
ஒட்டநத்தம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அக்கநாயக்கன்பட்டி, கீழபூவானி, மேலபூவானி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், முறம்பன், கல்லத்திகிணறு, மலைப்பட்டி, தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கணேஷ்நகர், என்ஜிஓ காலனி, அமுதா நகர், கிருபை நகர், காமராஜ் நகர், சங்கர் காலனி, 3-வது மைல், புதுக்குடி, தூத்துக்குடி ஆட்டோ துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட என்.டி.பி.எல் மற்றும் கடலோர காவல் படை குடியிருப்பு பகுதிகள், சுனாமி காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வரதவிநாயகர் கோயில் தெரு, முஸ்லீம் தெரு, தோப்புத் தெரு, பெரியார் தெரு, திருச்செந்தூர் பிரதான சாலை, எம்ஜிஆர் நகர், பெரியசாமி நகர், முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
நாளை
இதே போன்று தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குளத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குளத்தூர் பீடரில் உள்ள கல்மேடு மற்றும் அதன் அருகில் உள்ள உப்பள பகுதிகளிலும், சாயர்புரம் மஞ்சள்நீர்க்காயல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சாயர்புரம் பீடரில் உள்ள சிவத்தையாபுரம், புளிய நகர், நடுவக்குறிச்சி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், மஞ்சள்நீர்க்காயல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பழையகாயல் பீடரில் உள்ள கோவங்காடு உப்பளம் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது என்று கூறி உள்ளார்.