வெண்ணைமலை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் நாளைமறுநாள் மின்சார நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு காரணமாக வெண்ணைமலை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு
கரூர் கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோவிந்தம்பாளையம், எல்.வி.பி.நகர், பெரியார் நகர், வணிக வளாகம், அம்பாள் நகர், ஆண்டாங்கோவில், கோதை நகர், ஈரோடு ரோடு, ஆத்தூர் பிரிவு, வேலுச்சாமிபுரம், சின்னகோதூர், பெரிய கோதூர், ரெட்டிபாளையம், செல்லாரபாளையம், அரிக்காரம்பாளையம், ஆத்தூர் நத்தமேடு, பாலாம்மாள்புரம், மூலிமங்கலம்.புன்னம்சத்திரம், நடுபாளையம், மில்கேட், எல்.ஆர்.ஜி.நகர், ஆண்டாங்கோவில் புதூர், சரஸ்வதி நகர், கோவை ரோடு, விஸ்வநாதபுரி, சாலப்பாளையம், தண்ணீர்பந்தல், மொச்சகொட்டம்பாளையம், வேப்பம்பாளையம், குளத்துபாளையம், பவித்திரம் மேடு, பாலமலை ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
வெண்ணைமலை
இதேபோல் மண்மங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வெண்ணைமலை பீடர், புலியூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வீரராக்கியம் பீடர், பொரணி பீடர் ஆகிய பீடர்களில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெண்ணைமலை, பசுபதிபாளையம், நாவல்நகர், ராம்நகர், சின்னவடுகப்பட்டி, பெரிச்சிபாளையம், பேங்க் காலனி, ஏ.பி.நகர், வி.கே.ஏ. பால்பண்ணை, சின்னகிணத்துப்பட்டி, மைலம்பட்டி.குண்டாங்கல்பட்டி, லட்சுமணம்பட்டி, குப்பகவு-ண்டனூர், வெண்ணிலை, அல்லாளிக்கவுண்டனூர், குமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பள்ளப்பட்டி
இதேபோல பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணைமின்நிலையங்களில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிப்பட்டி, பெரியசீத்தப்பட்டி, ரெங்கராஜ்நகர், சவுந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர்.வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி (டவுன் பகுதி), கொத்தபாளையம், காடிபட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.