இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு;
ஆர்.எஸ்.மங்கலம், இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் துணைமின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனந்தூர், கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியாங்கோட்டை, பனிக்கோட்டை, புத்தூர், நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, ஓடக்கரை, தூவார், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேபோல் முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் முதுகுளத்தூர் டவுன், கீரனூர், நல்லூர், மணலூர், ஆத்திகுளம், கே.ஆர்.பட்டினம், கீழத்தூவல், மேலத்தூவல், காக்கூர், புளியங்குடி அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.