இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நாமக்கல்

இன்று

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகே உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

குமாரபாளையம்

குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், குமாரபாளையம் நகரம், சின்னப்பன் நாய்க்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், டி.வி. நகர், குளத்து காடு, எதிர்மேடு, தட்டாங்குட்டை, கல்லங்காட்டு வலசு, வேமன் காட்டு வலசு, கோட்டை மேடு, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சமய சங்கிலி

குமாரபாளையம் தாலுகா சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிப்பாளையம் அக்ரகாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரகாரம், சத்தி ரோடு அக்ரகாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

ஏமப்பள்ளி

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ.கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், பிளிக்கல் மேடு, மலப்பாளையம், பொட்லிபாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னீர் குத்திபாளையம், வேட்டுவம்பாளையம், பல்லநாயக்கன்பாளையம், பட்லூர், இறைய மங்கலம், சாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை

பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகர், சுண்டக்காபாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் கோபால், முருகன், ராணி ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story