இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x

சமயநல்லூர், வலையப்பட்டி பகுதியில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் பீடர் மற்றும் அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடர்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று( வியாழக்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், வளர் நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு, லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகதீர்த்தம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இதை போல மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையபட்டி பீடர் வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் வாடிப்பட்டி பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இதனால் மறவர் பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு, பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story