இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
குலசேகரன்கோட்டை
சமயநல்லூர் மின் கோட்டத்துக்குட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் குலசேகரன்கோட்டை பீடரில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
வலைச்சேரிபட்டி
கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதைகளில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே தற்காக்குடி, பூமங்கலப்பட்டி, வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, நீதிபுரம், வெள்ளாளப்பட்டி, வி.புதூர், காரியேந்தல்பட்டி, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, மங்களாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மதுரை கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.
வண்டியூர்
மதுரை வடக்கு கோட்டம் வண்டியூர் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருது பாண்டியா் தெரு, ஜூப்ளி தெரு, அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி/ நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் மதுரை மேற்கு கோட்டம் அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பைபாஸ் ரோடு, பிரசன்னா காலனி, வைக்கம் பெரியார் நகர் ரோடு, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தபுரம் ஜே.ஜே. நகர், காமராஜர் நகர், ரிங் ரோடு, குருதேவ் வீடுகள். பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெத்தூர்
சமயநல்லூர் மின்கோட்டத்துக்குட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கோட்டம், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம், தாடக நாச்சிபுரம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
பரவை
சமயநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட அலங்காநல்லூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகபட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.