இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று மின்தடை

சிங்கம்புணரி துணை கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையம், புழுதிபட்டி உயரழுத்த மின் பாதையில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது., இதில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கே.புதுப்பட்டி, தர்மபட்டி, இடையபட்டி, கொண்டபாளையம், கரிசல்பட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், புழுதிபட்டி, பிரான்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை திருப்பத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை மீனாட்சி நகர், மதுரை ரோடு, மதுரை முக்கு, திருப்பத்தூர் ரோடு, சாஸ்திரி 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, பாரதி நகர் ஏரியா, காமராஜர் வீதி, காளவாசல், வசந்தம் தெரு, நெல் மண்டி தெரு, வேலாயுத சாமி கோவில் தெரு, மேலூர் ரோடு, ராம் நகர், கொட்டக்குடி, லட்சுமண நகர், இந்திரா நகர், இளையான்குடி ரோடு, மருத்துவக்கல்லூரி, பஸ் நிலையம், சிவன் கோவில், பழைய கோர்ட்டு பகுதி, காந்திவீதி, நேரு பஜார், தொண்டி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை ஊரகப் பகுதியில் வாணியங்குடி, பி.எஸ்.ஆர். நகர், மேலவாணியங்குடி, கீழக்கண்டனி, மேலகண்டனி, சுந்தர நடப்பு, சாமியார்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், பையூர், அண்ணாமலை நகர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டன், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள் பட்டி, சோழபுரம், காமராஜர் காலனி, எஸ்.பி.பங்களா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

அமராவதிபுதூர்

காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காரைக்குடி மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட அமராவதிபுதூர் துணை மின்நிலையத்தில் நாளை (17-ந்தேதி) உயர் மின்னழுத்த மின் பாதைகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அமராவதிபுதூர், ரஸ்தா, ஆறாவயல், தேவகோட்டை ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story