மேட்டூரில் மின் சீரமைப்பு பணி: காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் பாதிப்பு

மேட்டூரில் மின் சீரமைப்பு பணி: காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் பாதிப்பு
x

மேட்டூரில் மின் சீரமைப்பு பணியால் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

மேட்டூரில் மின் சீரமைப்பு பணியால் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேட்டூரில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகளுக்கு நேற்று மின் தடை செய்யப்பட்டதாக தெரிகிறது.

எனவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காவிரி கூட்டு குடிநீர் நேற்று வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. மக்களுக்கு மாற்று குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் குடிநீர் வினியோகிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story