மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்


மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 July 2023 4:45 AM IST (Updated: 18 July 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்


சோமனூர்


மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பொதுக்குழு கூட்டம்


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சோமனூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவை- திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.


பின்னர் கூட்டத்தில் முன்னாள் சங்க தலைவர் சி.பழனிச்சாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வட்டி அபராத தொகை ரத்து செய்ய வேண்டும்


தொடர்ந்து கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு கூடுதலாக 250 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளான கூடுதலாக கணக்கீடு செய்த மின் கட்டணத்தை கழித்து தரக்கோரியும், நிலுவை மின் கட்டணத்துக்கு வட்டி மற்றும் அபதார தொகையை ரத்து செய்ய கோருவது,


ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டுவது, விசைத்தறியாளர்களும் ஒருவார காலத்திற்குள் மின்கட்டன குறைப்பு கோரிக்கை மனுக்களை தலைமைச்சங்கத்தில் அளிக்க கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Next Story