விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி அருகே வைகுந்தம் கணக்கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 24), விசைத்தறி தொழிலாளி. கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கந்தசாமி தனது பழைய வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு உள்பக்கம் பூட்டு போட்டிருந்தை பார்த்த கந்தசாமி, ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார். அங்கு வீட்டின் உத்திரத்தில் கார்த்தி, வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசைத்தறி தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story