தீ விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்கம்
சந்தைப்பேட்டையில் தீ விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்கம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சந்தைப்பேட்டை வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதல் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story