இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்


இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
x

சேரி ஊராட்சியில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சேரி ஊராட்சியில் கலவை தனியார் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் சார்பில், ஊரக தோட்டக்கலை பணியின் கீழ் 60 நாள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கடைசி நாளான நேற்று மாணவிகள் லோகேஸ்வரி, மதுமிதா, மம்தா, மணிமொழி, நிலா லட்சுமி, நிஷா, இவாஞ்சலின் ஆகியோர் விவசாய கண்காட்சி நடத்தினர். இதில் நிலம் இல்லாதவர்கள் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மூலம் காய்கறி பயிர் வளர்த்தல் மற்றும் 100 சதவீதம் முளைப்பு திறன் அதிகரிக்கும் வகையில் குழித்தட்டு முறையில் நாற்று நடவு, விவசாய வயலில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த இயற்கை முறையில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் வீணாகும் காய்கறி கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்தல், ஐந்து அடுக்கு தோட்டம், மகசூலை அதிகரித்தல், தேனீ, காளான், பட்டுப்புழு வளர்ப்பு, சொட்டு நீர் பாசன முறையில் இயற்கை விவசாயம், உயிரி உரங்களின் பயன்பாடு, இயற்கை முறையில் உரம் தயாரிப்பு போன்றவை குறித்து விளக்கினர்.

இந்த முகாமில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அரிதாஸ் தலைமை தாங்கி பார்வையிட்டார். ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ், கிராம நிர்வாக அதிகாரி ரகு, உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story