விவசாயிகளுக்கு காய்கறி, பழங்களின் தர பராமரிப்பு பயிற்சி


விவசாயிகளுக்கு காய்கறி, பழங்களின் தர பராமரிப்பு பயிற்சி
x

தர்மபுரியில் உழவர்சந்தைகளில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் தர பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரியில் உழவர்சந்தைகளில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் தர பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தரமானதாகவும், சுகாதார முறையில் நுகர்வோருக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், தர்மபுரி உழவர் சந்தை விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சி தர்மபுரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார். உழவர் சந்தை வேளாண்மை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுப்புறத்தைபராமரித்தல், காய்கறி, பழங்கள் தரத்தை பராமரித்தல், இருப்பு வைத்தல், காய்கறிகள், பழ கழிவுகளை அப்புறப்படுத்தல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின்படி உழவர் சந்தை விவசாயிகள் செயல்பட வேண்டும்.

பதிவு சான்றிதழ்

உணவு பொருட்கள் அடங்கிய பாக்கெட்டில் உள்ள லேபிளில் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு முகவரி, தேதி, காலாவதி தேதி ஆகியவை இடம் பெற வேண்டும். இதேபோல் உணவு பொருளின் எடை, ஊட்டச்சத்து தகவல்கள், சைவ, அசைவ குறியீடு, உணவு பாதுகாப்பு முத்திரை ஆகியவை உணவு பொருட்கள் அடங்கிய லேபிளில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை விவசாய விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் மஞ்சுநாத் மற்றும் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story