தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி

நல்லானூரில் 5 மாவட்டங்களை சேர்ந்த தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி நல்லானூரில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 8 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தேசிய மாணவர் படையை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தேசிய மாணவர் படைகளுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி மற்றும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டர்கள் ராஜேஷ் மிஸ்ரா, தினேஷ் ராஜா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினர். கல்லூரி முதல்வர் சுப்பராயன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முருகன், அலுவலர்கள் ஈஸ்வரராவ், மனோகரன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள்.






