டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுத உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தர்மபுரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுத உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தர்மபுரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இது தொடர்பாக கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச பயிற்சி வகுப்பு
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பீல்ட் சர்வேயர் மற்றும் உதவி டிராப்ட்மேன் பணிக்கான 1,089 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி தேர்வை எழுத உள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.
பயன் பெறலாம்
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/GCVWxWm என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டி தேர்வை எழுத உள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.