விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி


விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இளைஞர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவிஷேன் அக்டாமி நிறுவனம் மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

தரச்சான்றிதழ்

இந்த பயிற்சி முடிப்பவர்களுக்கு ஏ.ஏ.எஸ்.எஸ்.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டத்தில் தகுதியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com ல் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story