ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சியை உதவி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
ஓசூர்
ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறையின் கிருஷ்ணகிரி பிரிவு உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன், ராமானுஜ பட்டாச்சாரியார், அறிவானந்தம் ஆகியோர் பேசினர். இதில் தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், செயல் அலுவலர்கள் சின்னசாமி, சித்ரா, ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, சத்யா, அண்ணாதுரை மற்றும் பணியாளர் சசிகுமார் ஆகியோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் என்று உதவி ஆணையர் தெரிவித்தார்.