பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி
வெண்ணந்தூர் பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் 3 நாட்கள் பருத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் கோயமுத்தூர் ஆகிய பயிற்சி நிலையங்களில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் பருத்தி பயிரில் புதிய ரகங்கள், புதிய எந்திரங்கள் பயன்பாடு மற்றும் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி கட்டுப்பாடு, நோய்கள் தாக்குதல் அறிகுறிகள், அதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துதல் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாகவும், வயல்வெளி பயிற்சியாகவும் வழங்கப்பட்டன. மேலும் புதிய தொழில்நுட்பமான அடர் நடவு முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளுதல், பருத்தி விதை நடவு எந்திரம், களை எடுக்கும் எந்திரங்கள், புதிய உளவு கருவிகள், பருத்தி எடுக்கும் எந்திரங்களின் செயல்பாடுகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கப்பட்டன.