அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

புதுச்சத்திரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல்

புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி அளவிலான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கும் மையம் வருகிற 6-ந் தேதி முதல் செயல்பட உள்ளது. அதையொட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வட்டார அளவில் புதுச்சத்திரத்தில் நடந்தது. பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சியில் புதுச்சத்திரம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என 113 பேர் கலந்து கொண்டனர். இதில் நான் முதல்வன் திட்டம் குறித்தும், திட்டத்தின் நோக்கம் மற்றும் பங்கேற்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கருத்தாளர்களால் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்றுனர்கள் பெரியசாமி, கோகிலா ஆகியோர் பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.


Next Story