நாமக்கல்லில், நாளை மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி


நாமக்கல்லில், நாளை மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 1:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நாளை மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தல் என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிக்க இடம் தேர்வு செய்தல், மண்புழுவின் வகைகள், மண்புழுவை தேர்வு செய்தல், கழிவுகளை தேர்வு செய்தல், மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், மண்புழு உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய உத்திகள், மண்புழு உரம் சேகரித்தல், மண்புழு வடிநீர் உற்பத்தி செய்தல் மற்றும் ஊட்டமேற்றிய மண்புழு உரம் தயார் செய்தல் பற்றிய செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story