ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி!


ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி!
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 11:47 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்பட்டது.

நாமக்கல்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும் தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நாமக்கல் ஒன்றியத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இப்பயிற்சியில் பள்ளி சூழல் அமைப்பு, உடல் நலம் மற்றும் நல்வாழ்வு, மன்ற செயல்பாடுகள், கலையரங்கம் ஆகிய தலைப்புகளில் கருத்துக்கள் வழங்கப்பட்டன. மேலும் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு என்கிற தலைப்பிலும், எமீஸ் எண்ணை பதிவு செய்வது சார்ந்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) பாலசுப்பிரமணியம் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பயிற்சியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்து இருந்தனர்.


Next Story