அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 21 Jun 2023 1:00 AM IST (Updated: 21 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன்படி தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவ்வையார், அதியமான், அதகபாடி, பழைய தர்மபுரி, கோணங்கிநாயக்கனஅள்ளி, சோலைக்கொட்டாய், இலக்கியம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் முத்தம்பட்டி குறு வள மைய மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் தர்மபுரி ஒன்றியத்தை சேர்ந்த 513 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் ஆதிலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர் அருண்குமார், ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், அருணாஸ்ரீ, இளங்கோ, சாந்தி மற்றும் சத்யா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். முன்னதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்டத்திட்ட அலுவலர் ரவிக்குமார், தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் இளங்கோ, மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரன் ஆகியோர் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தையும் பள்ளி அளவில் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கி கூறினர்.


Next Story