தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகடிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பயிற்சி


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகடிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 July 2023 1:00 AM IST (Updated: 1 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள மண்டல தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சியை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். பொது மேலாளர் ரவிலட்சுமணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணியின் போது பொதுமக்களிடம் நடந்து கொள்வது குறித்தும், மனச்சுமை இல்லாமல் பணியாற்றுவது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் அரவிந்தன், உதவி மேலாளர் ஹர்ஷபாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story